×

ஒரே நாடு,ஒரே தேர்தல் கருத்து தெரிவித்த 5,000 பேர்

புதுடெல்லி: சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்துக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்ட குழுவை கடந்த ஆண்டு ஒன்றிய அரசு நியமித்தது. இந்த குழு இரண்டு முறை கூடியுள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு அனைவரும் ஏற்கக்கூடிய வகையிலான தேதி மற்றும் கருத்துகள் ஆகியவற்றை வழங்குமாறு அரசியல் கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதுவரை 6 தேசிய கட்சிகள்,33 மாநில கட்சிகள்,பதிவு பெறாத 7 கட்சிகளுக்கு இந்த குழு கடிதம் அனுப்பியுள்ளது. சட்ட ஆணையத்தின் கருத்துகளும் கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக தேர்தல் குறித்த சட்டங்களில் செய்ய வேண்டிய திருத்தம், நிர்வாக கட்டமைப்பு மாற்றம் குறித்து ஆலோசனைகளை பொதுமக்களும் அனுப்பலாம் என அறிக்கை வெளியிட்டிருந்தது. உயர்மட்ட குழுவின் வேண்டுகோளின்படி, 5 ஆயிரம் பேர் தங்கள் கருத்துகளை இமெயில் மூலம் அனுப்பியுள்ளனர் என உயர் மட்ட குழு அதிகாரிகள் தெரிவித்தன.

The post ஒரே நாடு,ஒரே தேர்தல் கருத்து தெரிவித்த 5,000 பேர் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union government ,President ,Ram Nath Kovind ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை